உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

ராமேஸ்வரம் : சுதந்திர தின பாதுகாப்பையொட்டி ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.ஆக.15ல் சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் மக்கள் கூடும் பொது இடங்களில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். அதன்படி நேற்று பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., முத்து முனியசாமி தலைமையில் போலீசார் பாலத்தில் வெடிகுண்டு சோதனை செய்தனர்.துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பில் ஈடுபட்டனர். பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளதால் பாம்பன் புதிய, பழைய ரயில் பாலத்தில் அந்நியர்கள் ஊடுருவக் கூடாது. மேலும் பாலத்தில் அமர்ந்து துாண்டிலில் மீன் பிடிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ அனுமதி இல்லை. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
செப் 17, 2024 19:40

எதற்கும் ராகுல் அந்த இடத்திற்கு வாராமல் பார்த்து கொள்ளவும். அந்த ஆள் அலகு யாரும் போனது சீனாக்காரன் மற்றும் பாக்கி பயல்கள் தலைமன்னாருக்கு வர கூடும் ...


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ