உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வேளாண் உதவி இயக்குநர் பணியிடம் காலி; அரசின் உதவி, மானிய திட்டங்கள் தெரியாமல்  விவசாயிகள் தவிப்பு:

வேளாண் உதவி இயக்குநர் பணியிடம் காலி; அரசின் உதவி, மானிய திட்டங்கள் தெரியாமல்  விவசாயிகள் தவிப்பு:

திருவாடானை : திருவாடானையில் வேளாண் உதவி இயக்குநர் பணியிடம் காலியாக இருப்பதால் மத்திய, மாநில அரசின் உதவி, மானியத் திட்டங்கள் தெரியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஒன்றியத்தில் ஆண்டுதோறும் நெல், பருத்தி, மிளகாய், சிறுதானிய பயறுகள் சாகுபடி பலஆயிரம் ஏக்கரில் நடக்கிறது. திருவாடானை பாரதிநகரில் வேளாண்மை அலுவலகம் உள்ளது. இங்கு பணியாற்றிய உதவிஇயக்குநர் கருப்பையா கடந்த மே முதல் ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக ராமநாதபுரம் வேளாண்மை உதவி இயக்குநர், கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றுகிறார். இதனால் திருவாடானை பகுதியில் வேளாண்துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருவாடானை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கார்த்திகைராஜா, மேகலா கூறியதாவது- ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடைபெறும் போது உதவி இயக்குநர் கலந்து கொள்வார். அவரிடம் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் கேட்போம். அதற்கு அவர் பதில் அளிப்பார். தற்போது விவசாயிகளுக்கு விளக்கங்களை எடுத்துரைப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. விவசாயிகளின் வேளாண் தொடர்பான சந்தேகங்கள், உழவு மானியம், பயிர் காப்பீடு, வட்டாரத்தில் விவசாய குழுக்கள் அமைப்பது உள்ளிட்ட பிரச்னை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் வேளாண்மை உதவி இயக்குநர் கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றுவதால் அவருக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே திருவாடானை வேளாண்மை அலுவலகத்தில் நிரந்தர வேளாண்மை உதவி இயக்குநர் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி