உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரி முன் மீண்டும் பேரிகார்டு

கல்லுாரி முன் மீண்டும் பேரிகார்டு

திருவாடானை: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருவாடானை அரசு கலைக்கல்லுாரி முன்பு மீண்டும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டது. அவற்றை அப்புறப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவாடானை டி.எஸ்.பி., நிரேஷ் எச்சரித்தார்.மதுரை-தொண்டி நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக திருவாடானை அரசு கலைக்கல்லுாரி முன்பு மாணவர்களின் பாதுகாப்பிற்காக பேரிகார்டுகள் அமைக்கப்பட்டது.அந்த பேரிகார்டுகளை இரவில் சில சமூகவிரோதிகள் அருகில் உள்ள கண்மாய்க்குள் துாக்கி வீசினர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மீண்டும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டது.டி.எஸ்.பி., நிரேஷ் கூறுகையில், பேரிகார்டுகளை யாராவது கண்மாய்க்குள் துாக்கி வீசும் செயலில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை