உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடற்கரை புறம்போக்கிற்கு பட்டா வழங்க கூடாது: மருத்துவமனை தலைக்காய பிரிவில் டாக்டர் இல்லை குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

கடற்கரை புறம்போக்கிற்கு பட்டா வழங்க கூடாது: மருத்துவமனை தலைக்காய பிரிவில் டாக்டர் இல்லை குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கடற்கரை புறம்போக்கு இடத்திற்கு பட்டா வழங்க கூடாது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தலைக்காயம் பிரிவில் டாக்டர்கள் இல்லை உள்ளிட்ட குறைகள், கோரிக்கை மனுக்களுடன் மக்கள் குவிந்தனர்.ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 13 பேருக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்திய ஸ்கூட்டர்களை கலெக்டர் வழங்கினார்.

அடிப்படை வசதி வேண்டும்

பரமக்குடி வேந்தோணி குமரக்குடி குறவன் சமுதாய மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு அளித்தனர். இதில் 40 ஆண்டுகளாக குடியிருக்கிறோம். மின்சாரம், ரோடு வசதியில்லை. குடிநீரும் பெயரளவில் வருகிறது. அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதுடன் விடுபட்ட அனைவருக்கும் இ-பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பட்டா வழங்க எதிர்ப்பு

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா உப்பூரில் கடற்கரை புறம்போக்கு இடத்திற்கு பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். இதில் கண்மாய், வயல்களில் கழிவுநீர் செல்லும் வழியில் பட்டா வழங்கினால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படும். எனவே பட்டா வழங்க கூடாது என வலியுறுத்தினர்.

தலைக்காயசிகிச்சை பிரிவில் டாக்டர் இல்லை

ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துாரை சேர்ந்த பானைமணி அளித்த மனுவில், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவு செயல்படவில்லை. விபத்தில் சிக்கியவர்களை மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விடுகின்றனர்.தலைக்காய சிகிச்சை பிரிவில் டாக்டர்களை நியமிக்க வேண்டும். ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசு நடடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதுபோல பட்டா மாறுதல், உதவித்தொகை, வேலை வாய்ப்பு, மகளிர் உரிமைத்தொகை என 452 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர், சமூக பாதுகாப்பு திட்டம் துணை கலெக்டர் தனலெட்சுமி, அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை