உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பூத் சிலிப் விநியோகம்: கலெக்டர் ஆய்வு

பூத் சிலிப் விநியோகம்: கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம் : லோக்சபா தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் நகரில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார்.ராமநாதபுரம் சின்னக்கடை வீதி, குமரய்யா கோவில் ரோடு ஆகிய இடங்களில் மக்களின் வீடுகளுக்கு சென்று ஓட்டுச்சாவடி மைய அலுவலர் வாக்காளர்களுக்கு பூத் சிலீப் வழங்குவதை ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர்களிடம் ஓட்டுச்சாவடியில் ஏப்.19ல் ஓட்டளித்து ஜனநாயக கடமையை நிலைநிறுத்த வேண்டும் என கலெக்டர் கூறினார்.மேலும் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைத்து ஓட்டுச்சாவடி பகுதிகளிலும் வாக்காளர்களுக்கான பூத் சிலிப் வீடுகளுக்கு சென்று வழங்கிடும் பணியை உறுதி செய்ய வேண்டும்.விடுபடாமல் முழுமையாக மேற்கொண்டு நுாறு சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியத்தை வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், தாசில்தார் சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி