உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தற்கொலை செய்த மகளின்  உடலை  எரித்த தந்தையுடன் 8 பேர் மீது வழக்கு 

தற்கொலை செய்த மகளின்  உடலை  எரித்த தந்தையுடன் 8 பேர் மீது வழக்கு 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே காருகுடி பகுதியில் தற்கொலை செய்த மகளின் உடலை போலீசாருக்கு தெரியாமல் எரித்த தந்தை உட்பட 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. காருகுடி செந்தில்குமார் மகள் காவியா 19. இவர் ராமநாதபுரம் மகளிர் கல்லுாரியில் 2 ம் ஆண்டு கணிதம் படித்து வந்தார். இவர் வீட்டு வேலைகளை சரி வர செய்யாததால் தந்தை செந்தில்குமார் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த காவியா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.இதை போலீசாரிடம் தெரிவிக்காமல் காவியா உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரித்தனர்.இது குறித்து காவனுார் வி.ஏ.ஓ., தேன்மொழி புகாரில் பஜார் போலீசார் செந்தில்குமார், அவரது மனைவி நர்மதா, உறவினர்கள் ராமசாமி, துரைசிங்கம், முனியாண்டி, சுப்பிரமணி, சண்முகம், விஜயகுமார் ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை