| ADDED : ஏப் 17, 2024 06:16 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் தற்போதுகாவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததாலும், குடிநீர் கசிவுகளை சரிசெய்து சுழற்சி முறையில் சீரான குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ராமநாதபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் திருச்சி முத்தரசநல்லுார்அருகே உள்ள காவிரி ஆற்றின் நீரை ஆதாரமாகக் கொண்டு 2009 முதல் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகியமாவட்டங்களில் உள்ள 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 3163ஊரக குடிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.இதன்படி ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு முறையே நகராட்சிகளில் 70 லிட்டரும், பேரூராட்சிகளுக்கு 50 முதல் 60 லிட்டர், ஊரக குடியிருப்புகளுக்கு 20 முதல் 30 லிட்டர் வீதம் குடிநீர் வழங்க வேண்டும். தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் தலைமைநீரேற்று நிலையத்தில் 4 கிணறுகளின் நீரூற்று குறைந்துள்ளதால் நீரேற்றம் செய்யும் அளவும் குறைந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெறப்படும் குடிநீரின் அளவு36.72 மில்லியன் லிட்டர். தற்போது பழுதடைந்த குடிநீர்குழாய்கள் உடனடியாக சரிசெய்யப்படுகிறது. ஜல் ஜீவன்திட்டத்தில் புனரமைப்பு பணிகள், புதிய கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடக்கிறது.இப்பணிகள் முடிவுற்றவுடன்முழுமையாக குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.