உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜூலை 31ல் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 

ஜூலை 31ல் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 

திருவாடானை : திருவாடானை தாலுகாவில் மக்களுடன் முதல்வர் திட்டம் ஜூலை 31 முதல் துவங்க உள்ளது.அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர மக்களுடன் முதல்வர் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருவாடானை ஒன்றியத்தில் ஜூலை 31 ல் அஞ்சுகோட்டை ஊராட்சி கருப்பர் கோயிலில் நடைபெற உள்ளது. இம் முகாமில் ஓரிக்கோட்டை, குஞ்சங்குளம், அஞ்சுகோட்டை, அரும்பூர், குளத்துார், அச்சங்குடி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதி குறைகளை மனுக்கள் அளிக்கலாம். ஆக.9ல் பெரியகீரமங்கலம் ஊராட்சியிலும், ஆக.,12ல் நம்புதாளை ஊராட்சியிலும், ஆக.,20ல் கொடிப்பங்கு ஊராட்சியிலும், ஆக.,29ல் பாண்டுகுடி, செப்.12 ல் கடம்பூர் ஊராட்சியிலும் நடைபெறும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ