உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்கள் கனவுகளை நிஜமாக்க  அவசியம் உயர்கல்வி பயில வேண்டும் கலெக்டர் அறிவுரை

மாணவர்கள் கனவுகளை நிஜமாக்க  அவசியம் உயர்கல்வி பயில வேண்டும் கலெக்டர் அறிவுரை

ராமநாதபுரம்: பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் தங்களது லட்சியம், கனவை நிஜமாக்க அனைவரும் கட்டாயம் உயர்கல்வி பயில வேண்டும் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை சார்பில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் உயர்கல்வி வழிகாட்டல் 'என் கல்லுாரி கனவு நிகழ்ச்சி' நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்து பேசுகையில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க தேவையான கல்வியை தேர்வு செய்யவேண்டும்.அனைவரும் கட்டாயம்உயர்கல்வி படிக்க வேண்டும். மாணவர்களின் லட்சியம், கனவை வெற்றியடைய செய்யும் காலம் இது. இதை தவறவிடாமல் பயன்படுத்தி திறமைக்கும் ஏற்ற உயர்கல்வியை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்றார். மாவட்ட ஆதிதிராவிடர்,பழங்குடியினர் நலத்துறை அலுவலர் பழனிக்குமார், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜ மனோகரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்