உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல்

தொண்டி : தேவிபட்டினம் அருகே அரசால் தடை செய்யபட்ட இழுவை வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததால் வலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.அரசால் அங்கீகரிக்கப்பட்ட மீன்பிடி வலைகளை மட்டுமே பயன்படுத்தி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க அனுமதி உண்டு. அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி, இழுவை வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது.இந்த வலைகளை வைத்து மொத்தமாக உள்ளிழுப்பதால் அடுத்தடுத்த மீன்பிடிக்க முயலும் மற்றவர்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை. எனவே இவ்வலைகளை மீனவர்கள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், தேவிபட்டினம் மீன்வளத்துறை ஆய்வாளர் காளீஸ்வரன், கடல் அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ., குருநாதன் மற்றும் மரைன் போலீசார் முடிவீரன்பட்டினம் முதல் தேவிபட்டினம் வரை நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது 11 படகுகளில் இழுவை வலை வைத்து மீன்பிடித்ததால் வலைகளை பறிமுதல் செய்தனர். மீன்வளத்துறை அலுவலர்கள் கூறுகையில், இழுவை வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை செய்தும் பலர் இதில் மீன் பிடிக்கின்றனர். ஆகவே முதல் கட்டமாக வலைகளை பறிமுதல் செய்துள்ளோம். மீனவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை