உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செய்யது ஹமிதா கலை - அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

செய்யது ஹமிதா கலை - அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு விழா நடந்தது.முகமது சதக் அறக்கட்டளையின் தலைவர் முகமது யூசுப் சாகிப் தலைமை வகித்தார். செயலாளர் ஷர்மிளா, இயக்குனர்கள் ஹாமித் இப்ராகீம் மற்றும் ஹபீப் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ராஜசேகர் ஆண்டறிக்கை வாசித்தார்.காரைக்குடி அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் பட்டம் வழங்கி பேசியதாவது: மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரியிலேயே ஸ்டார்ட் அப் எனப்படும் சிறிய நிறுவனங்களை தொடங்கி தங்களுக்கு மற்றும் பின்வரும் கல்லூரி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் செய்யலாம் என்றார்.இளங்கலை பட்டம் 292 பேரும், முதுகலை பட்டம் 24 பேருக்க வழங்கப்பட்டது. பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை