உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெரிய கண்மாய் தென்கலுங்கு ஷட்டர்களில் துாண்கள் சேதம்

பெரிய கண்மாய் தென்கலுங்கு ஷட்டர்களில் துாண்கள் சேதம்

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதியில் தென்கலுங்கு ஷட்டர்கள் சேதமடைந்துள்ளன. பாதிப்புகள் ஏற்படும் முன் அதனை சீரமைக்க பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை முன்வர வேண்டும்.ராமநாதபுரம் பெரிய கண்மாயில் மழைநீர், வைகை ஆற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சேமிக்கப்பட்டு, இதன்வழியாக பலஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்பட்டதண்ணீர் தென் கலுங்கு பகுதியில் 5 அடிக்கும் மேல் தேங்கியுள்ளது. தென் கலுங்கு பகுதியில் இருந்து 3962.45 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகிறது. ராமநாதபுரம் கண்மாயிலிருந்து திறக்கப்படும் நீர் அதன் கீழ் உள்ள கண்மாய் பகுதிக்கு சென்று சேரும் வகையில் உள்ளது. தென் கலுங்கு பகுதியினை பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறையினர் முறையான பராமரிப்பு பணிகளை செய்வதில்லை. இதன் காரணமாக தென் கலுங்கு பகுதியில் ஷட்டர்களை தாங்கி நிற்கும் துாண்கள் பலமிழந்து சேதமடைந்து தொங்கி கொண்டிருக்கின்றன. மழைக்காலங்களில் தண்ணீர் அதிகரிக்கும் போது ஷட்டர்களை உடைத்துக் கொண்டு தேங்கி நிற்கும் தண்ணீர் வீணாகும் நிலை ஏற்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் சிக்கல் ஏற்படும். உடனடியாக பொதுப்பணித்துறையினர் தென் கலுங்கு பகுதியில் பராமரிப்பு பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தர விட வேண்டும். -------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி