உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டி.கிருஷ்ணாபுரத்தில் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியால் அபாயம்

டி.கிருஷ்ணாபுரத்தில் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியால் அபாயம்

சிக்கல் : சிக்கல் அருகே டி.கிருஷ்ணாபுரத்தில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் விபத்து அபாயம் நிலவுகிறது.தனிச்சயம் ஊராட்சி டி.கிருஷ்ணாபுரத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு 2005-ல் கட்டப்பட்ட 50 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது.இதன் பக்கவாட்டு பகுதியில் விரிசல் ஏற்பட்டதால் நீர்க்கசிவு ஏற்படுகிறது.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தரமற்றதாக கட்டப்பட்டுள்ளதால் கட்டப்பட்ட சில ஆண்டுகளில் சேதமடைந்தது. பராமரிப்பு பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டது. அதிக தண்ணீர் ஏற்றுவதால் பாரம் தாங்காமல் இடியும் நிலையில் உள்ளதாக அப்பகுதியினர் அச்சம் தெரிவித்தனர்.டி.கிருஷ்ணாபுரம் பா.ஜ., கணேசமூர்த்தி கூறுகையில், தொட்டியின் அடிப்பகுதி மற்றும் கூரையில்சிமென்ட் பூச்சு அடிக்கடி உதிர்ந்து விழுகிறது. பல இடங்களில் விரிசலுடன் உள்ளதால் மேல்நிலைத் தொட்டி மீது ஏறி சுத்தம் செய்யவோ அவற்றில் குளோரின் பவுடர் தெளிக்கவோ முடியவில்லை.கடலாடி யூனியன் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.எனவே கிராம மக்களின் நலன் கருதி இதே கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டியை அமைத்து அதன் பின் சேதமடைந்த தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை