உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

மழைநீர் செல்வதற்கு வழியின்றி ராமநாதபுரம் நகராட்சி, பட்டணம்காத்தான், சக்கரகோட்டை, சூரன்கோட்டை உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் ரோட்டில் குளம் போல தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. இதனால் ரோடு சேதமடைந்து பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது.ராமநாதபுரம்--ராமேஸ்வரம் ரோடு, சக்கரகோட்டை, பாரதிநகர், நேருநகர், ஓம்சக்தி நகர் உள்ளிட்ட பல இடங்களில் ரோடுகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக சக்கரகோட்டை கண்மாய் கரை அருகே கீழக்கரை ரோடு வெடித்து விரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது.இரவு நேரத்தில் சிறிய அளவிலான விபத்துக்கள் நடக்கிறது. எனவே நகர், புறநகர் பகுதிகளில் சேதமடைந்துள்ள ரோடுகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.அதற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ