உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானையில் இருள் சூழ்ந்த பஸ் ஸ்டாண்ட்: பயணிகள் அவதி

திருவாடானையில் இருள் சூழ்ந்த பஸ் ஸ்டாண்ட்: பயணிகள் அவதி

திருவாடானை : திருவாடானை பஸ்ஸ்டாண்ட் இருளில் மூழ்கியதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.திருவாடானை பஸ் ஸ்டாண்டில் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் வெளியூர்களுக்கு சென்று விட்டு இரவில் திரும்பும் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். பயணிகள் கூறியதாவது:திருவாடானை பஸ் ஸ்டாண்டில் திருச்சி, ராமேஸ்வரம் போன்ற பல்வேறு நகரங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் இரவில் வருகிறது.குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பும் போது பஸ் ஸ்டாண்ட் இருளில் மூழ்கியுள்ளது. இங்கு வெறி நாய் தொல்லையும் அதிகமாக இருப்பதால் பயணிகள் அச்சப்படுகின்றனர்.இருட்டாக இருப்பது திருடர்களுக்கும் சாதகமாக உள்ளது. இங்குள்ள ைஹமாஸ் விளக்கும் எரிய வில்லை. அடிக்கடி மின்விளக்குகள் பழுதாகி விடுகின்றன. இதனால் இரவில் இருள் சூழ்ந்து விடுவதால் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மின்விளக்குகள் ஒரு சிலவற்றை தவிர பல எரிவது இல்லை.பழுதான மின்விளக்குகளை சரி செய்யவும், அனைத்து மின்விளக்குகளும் எரிவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ