உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊராட்சிகளில் புதிதாக குளம் அமைக்க முடிவு

ஊராட்சிகளில் புதிதாக குளம் அமைக்க முடிவு

திருவாடானை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கிராமங்களில் புதிய குளங்கள் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது.திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ரோடுகளை சீரமைப்பது, குட்டை அமைத்தல், வரத்துக்கால்வாய் துார்வாருதல், அரசு கட்டடப்பணிகள் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது கூடுதலாக கிராமங்களில் ஏற்கனவே உள்ள குளங்கள் தவிர கூடுதலாக குளம், குட்டை அமைப்பதற்கு இடவசதி குறித்து பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது: ஒன்றிய நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஊராட்சியிலும் புதிதாக குளம் அமைப்பதற்கான கிராமங்கள் குறித்த விபரங்களை அளிக்க ஊராட்சி நிர்வாகங்களிடம் கேட்கப்பட்டதில் திருவாடானை யூனியனில் 10 குளங்கள் புதிதாக அமைக்க தேர்வு செய்யபட்டுள்ளது. அதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடரும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை