உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் அருகே அசுத்தம் ; பக்தர்கள் அதிருப்தி

கோயில் அருகே அசுத்தம் ; பக்தர்கள் அதிருப்தி

கீழக்கரை : கீழக்கரை ஹிந்து பஜாரில் உக்கிர வீரமாகாளியம்மன் கோயில் அருகே காய்கறி மார்க்கெட் உள்ளது. கோயிலுக்கு எதிர்புறம் குடியிருப்பு பகுதியில் யாரும் பயன்படுத்தாத இடத்தில் அப்பகுதியினர் சிறுநீர் கழிப்பதால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.வார்டு கவுன்சிலரின் முயற்சியால் அப்பகுதியில் சுண்ணாம்பு ப்ளீச்சிங் பவுடர் துாவப்பட்டாலும் தொடர்ந்து அசுத்தம் செய்கின்றனர். பக்தர்கள் கூறியதாவது:பிரசித்தி பெற்ற உக்கிர வீரமாகாளியம்மன் கோயிலுக்கு முன் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறாக சிறுநீர் கழிப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாமி கும்பிட வருபவர்கள் முகம் சுளிக்கின்றனர். எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்கவும், ஒதுக்குப்புறமான இடத்தில் கழிப்பறை வசதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்