உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / யூனியன் கூட்டத்தில் பேசப்படும் கோரிக்கை நிறைவேறுவதில்லை: கவுன்சிலர் குற்றச்சாட்டு

யூனியன் கூட்டத்தில் பேசப்படும் கோரிக்கை நிறைவேறுவதில்லை: கவுன்சிலர் குற்றச்சாட்டு

திருவாடானை: ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் விடுக்கும் கோரிக்கைகளை அலுவலர்கள் நிறைவேற்றுவதில்லை என்று குற்றம் சாட்டினர்.திருவாடானை ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் முகமதுமுக்தார் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கவுன்சிலர் அருணாசலம்: கூட்டத்தில் கவுன்சிலர்களால் வைக்கபடும் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேறுவதில்லை. ரோடு, மின்சாரம், குடிநீர் போன்ற குறைகளை பேசினால் அதற்கு பதிலளிக்கும் அலுவலர்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறுகிறார்கள். நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தும் போதும் விரைவில் நிறைவேற்றபடும் என்ற அதே பதிலைத்தான் மீண்டும் தெரிவிக்கிறார்கள். இதனால் எந்த பயனும் இல்லை. கவுன்சிலர் சிவசங்கீதா: கலியநகரி, பாசிபட்டினம், ஓடவயல் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது போன்ற விவாதங்கள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை