மேலும் செய்திகள்
மதுரை--ராமேஸ்வரம் இடையே மெமு ரயில்கள் இயக்கப்படுமா
5 hour(s) ago
பா.ஜ., கட்சியின் 2வது பூத் கமிட்டி ஆலோசனை
6 hour(s) ago
அக்.11ல் ரேஷன் குறை தீர் முகாம்
6 hour(s) ago
நாளை (அக்.9) மின்தடை
6 hour(s) ago
பரமக்குடி : கூட்டுறவு சங்கங்ப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பரமக்குடி, எமனேஸ்வரம் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர் சங்கத்தின் 63வது பேரவைக் கூட்டம் எமனேஸ்வரத்தில் நடந்தது.சங்க தலைவர் ஜோதி கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். பணியாளர் சங்க மாநில கூட்டமைப்பு தலைவர் நடன சபாபதி, பொருளாளர் வெங்கடேஸ்வரன் பங்கேற்று பேசினர்.கூட்டத்தில், 2023ம் ஆண்டு ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டதுடன், வரவு, செலவு அங்கீகரிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.அப்போது கூட்டுறவு சங்க அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் தள்ளுபடி மானிய உச்சவரம்பை நீக்க வேண்டும். கைத்தறி துணிகளுக்கு ஜி.எஸ்.டி., யிலிருந்து முழு விலக்க அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்க உதவி செயலாளர் கோபி நன்றி கூறினார்.
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago