உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பார்த்திபனுாரில் மின்தடை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பார்த்திபனுாரில் மின்தடை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பரமக்குடி : பரமக்குடி அருகே பார்த்திபனுார் பகுதியில் தொடர் மின் தடையை கண்டித்து வியாபாரிகள், பொதுமக்கள் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பார்த்திபனுாரில் ஏராளமான வணிக நிறுவனங்கள், வீடுகள் என உள்ளன. இங்கு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காலை முதல் இரவு வரை அறிவிக்கப்படாத தொடர் மின் தடை ஏற்படுகிறது.இதனால் பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். வியாபாரிகள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.இதையடுத்து நேற்று காலை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்திபனுார் உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு மின்தடையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ