உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீன் வியாபாரிகள் சிண்டிகேட் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

மீன் வியாபாரிகள் சிண்டிகேட் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரத்தில் மீன் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்ததைக் கண்டித்து நாளை(ஜூலை 8) மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.நேற்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சங்கத் தலைவர் சகாயம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இறால், நண்டு, கணவாய், காரல், சங்காயம் ஆகிய மீன்களுக்கு மீன்பிடி தடை காலத்திற்கு முன்பு இருந்த விலையை விட தற்போது பல மடங்கு விலை குறைந்துள்ளது. இதற்கு மீன் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்ததே காரணம். இதனால் மீனவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதித்த நிலையில் மீன்பிடித் தொழில் நசுங்கும் அபாயம் உள்ளது.மீன்களுக்கு நியாயமான விலை கிடைக்க கலெக்டர், மீன்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என தீர்மானத்தில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை