உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பூக்குழி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

பூக்குழி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே திருவரங்கம் கிராமத்தில் அன்னை ஆதிகாளியம்மன் கோயிலில் பூக்குழி இறங்குதல் விழா நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். தினமும் ஆதிகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக காப்பு கட்டிய பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளில் பால்குடம், அக்கினி சட்டி, காவடி, வேல்குத்தி ஊர்வலமாக வந்து கோயில் முன்பு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். உலக நன்மை வேண்டி அன்னை ஆதிகாளியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை