உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தீ மிதித்த பக்தர்கள்

தீ மிதித்த பக்தர்கள்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் செந்தில் முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பூக்குழி விழா நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள் குளத்தில் நீராடி முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.கடந்த 10 நாள்களாக தினமும் இரவில் பெண்களின் கும்மியாட்டம், சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவின் தொடர்ச்சியாக நேற்று மூலவருக்கு 18 வகை அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை