உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாற்றுத்திறனாளிகள்  அடையாள அட்டை ஒப்படைப்பு போராட்டம் 

மாற்றுத்திறனாளிகள்  அடையாள அட்டை ஒப்படைப்பு போராட்டம் 

ராமநாதபுரம் : மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அடையாள அட்டைகளைஒப்படைக்கும் போராட்டம் நடந்தது.அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டத்தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் அரிகரசுதன், துணைத்தலைவர்கள் நிலர் வேணி, முத்துராமலிங்கம், துணை செயலாளர்கள் முனியசாமி, சீனிவாசன், நுார் முகமது உட்பட தாலுகா நிர்வாகிகள் பங்கேற்றனர். உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். நுாறு நாள் வேலை சட்ட விதியின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். மாதம் 35 கிலோ அரிசி கிடைக்க ரேஷன் கார்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன் பின்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ