உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரேஷன் கடைகளில் பாமாயில் பருப்பு வழங்காததால் அதிருப்தி

ரேஷன் கடைகளில் பாமாயில் பருப்பு வழங்காததால் அதிருப்தி

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் 85 ரேஷன் கடைகளும், 39 ஆயிரத்து 600 ரேஷன் கார்டுகளும் உள்ளன. இரு மாதங்களாக ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வழங்கவில்லை. இதனால் ரேஷன் கடையில் விநியோகம் செய்யப்படும் பொருள்களை மட்டும் வாங்கி பயன்பெறும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கூறுகையில், திருவாடானை தாலுகாவில் விவசாய தினக்கூலி மற்றும் 100 நாள் வேலை திட்டத்தை நம்பி பெரும்பாலான மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் 100 நாள் வேலை திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தினக்கூலி வேலைகளும் பெருமளவு இல்லாத காரணத்தால் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் ரேஷனில் வழங்கபடும் அத்தியாவசிய பொருட்களான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கிடைக்காதது கவலையாக உள்ளது என்றனர்.சிவில் சப்ளை அலுவலர்கள் கூறுகையில், இன்னும் சில தினங்களில் பாமாயில், துவரம் பருப்பு வந்துவிடும். அனைத்து கடைகளுக்கும் அனுப்பி வைத்து கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ