உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான  செஸ் போட்டி

ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான  செஸ் போட்டி

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன், ரோட்டரி கிளப் ஆப் கீழக்கரை சார்பில், இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.போட்டிகளை ராமநாதபுரம் கிருஷ்ணா இண்டர் நேஷனல் பள்ளி முதல்வர் முத்துக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் மாநில இணைச்செயலாளர் கண்ணன் ஆகியோர் துவங்கி வைத்தார்.ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் சுந்தரம் வரவேற்றார். ரோட்டரி கிளப் ஆப் கீழக்கரை தலைவர் தலைவர் கேசவன், செயலாளர் சிவகார்த்திக், பொருளாளர் செய்யது ராசிக்தீன், குஞ்சார் வலசை ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் பழனிக்குமார் பங்கேற்றார். செஸ் அசோசியேஷன் மாவட்ட துணைத்தலைவர் பாலமுருகன், துணை செயலாளர்கள் ஜீவா, ராஜன், நிர்வாகிகள் தவசிலிங்கம், ரிணிபவதாரினி, தமிழரசன் பங்கேற்றனர்.7, 9, 11,13,15,21 வயதிற்குட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தன. இதில் 325பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலாளர் ரமேஷ் ஒருங்கிணைத்தார். பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை