உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டாக்டர்களுக்கு குடியிருப்பு இல்லை 24 மணி நேரம் சிகிச்சையில் தொய்வு

டாக்டர்களுக்கு குடியிருப்பு இல்லை 24 மணி நேரம் சிகிச்சையில் தொய்வு

திருவாடானை: அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களுக்கு குடியிருப்பு வசதியில்லாததால் 24 மணி நேரம் சிகிச்சையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.திருவாடானையில் அரசு மருத்துவமனை உள்ளது. 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 40 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். 5 டாக்டர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் தற்போது இரு டாக்டர்கள் மட்டுமே உள்ளனர்.அவர்களும் மதியம் 1:00 மணி வரை சிகிச்சை அளித்து விட்டு சென்று விடுவதால் நோயாளிகள் சிரமம் அடைகின்றனர். டாக்டர்கள் தங்கி பணியாற்றும் வகையில் குடியிருப்பு வசதியில்லை. இதனால் இங்கு நியமிக்கப்படும் டாக்டர்கள் சில மாதங்கள் பணியாற்றிவிட்டு உயர் அதிகாரிகள் ஆதரவுடன் வேறு மருத்துவமனைக்கு மாறுதல் வாங்கி சென்று விடுகின்றனர். இதனால் நோயாளிகளுக்கு போதிய சிகிச்சை கிடைக்கவில்லை. விபத்தில் காயமடைந்து வருபவர்களும், அவசர நோயாளிகளும் ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பபடுகின்றனர். விபத்து, தற்கொலை, கொலை போன்ற வழக்கில் மதியத்திற்கு மேல் வரும் உடல்கள் மறுநாள் தான் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. மது போதையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சான்றிதழ் வாங்க முடியாமல் போலீசார் தவிக்கின்றனர். ஆகவே கூடுதல் டாக்டர்கள் நியமனம் செய்து அவர்கள் தங்கி பணியாற்றும் வகையில் குடியிருப்பு வசதி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ