உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓரியூரில் நாய்கள் தொல்லை

ஓரியூரில் நாய்கள் தொல்லை

திருவாடானை : திருவாடானை அருகே ஓரியூரில் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. நேற்று மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை விரட்டி கடித்ததில் ஒரு ஆடு இறந்தது. ஓரியூர் திட்டையை சேர்ந்த அலெக்ஸ் கூறுகையில், இங்கு 20க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன.அதில் நோய் கண்ட நாய்களும் உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது. நாய்கள் ஆடுகளை கடிப்பதால் ஆடுகள் பலியாகின்றன. நாய்கள் கடிப்பது தொடர் கதையாக இருப்பதால் தெரு நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தபட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ