உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலாடியில் தாலுகா அலுவலகத்தில் குடிநீர்

கடலாடியில் தாலுகா அலுவலகத்தில் குடிநீர்

கடலாடி, : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கடலாடி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டது.கடலாடி தாலுகா அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பல மாதங்களாக மக்கள் சிரமம் அடைந்தனர். கோடை காலத்தில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். குடிநீர் தேவைக்காக அருகில் உள்ள கடையில் குடிநீர் பாட்டில்களை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தனர்.இதுகுறித்து தினமலர் நாளிதழில் மார்ச் 20ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கடலாடி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களின் வசதிக்காக புதிய ஆர்.ஓ., பொருத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது. தினமலர் நாளிதழுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ