உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் இன்று கல்வி கடன் மேளா 

ராமநாதபுரத்தில் இன்று கல்வி கடன் மேளா 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் இன்று (ஆக.21) காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை கல்விக் கடன் முகாம் நடக்கிறது.நடப்பு 2024-25 ம் ஆண்டிற்கான கல்வி கடன் மேளா திட்டத்தில் மாவட்டத்திற்கு ரூ.49 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று ஆக.21ல் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் கல்விக் கடன் மேளா நடக்கிறது. நாளை (ஆக.22ல்) அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி, ஆக.23ல் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லுாரி, ஆக.27ல் பரமக்குடி கணபதி செட்டியார் பொறியியல் கல்லுாரி ஆகிய இடங்களில் கல்விக்கடன் மேளா நடக்கிறது.பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தனியார், அரசு கல்லுாரிகள், பாலிடெக்னிக், நர்சிங், ஐ.டி.ஐ.,க்களில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை