உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேவிபட்டினத்திற்கு சிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்

தேவிபட்டினத்திற்கு சிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆடி அமாவாசையில் ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து தேவிபட்டினத்திற்கு சிறப்பு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு ஆடி தை அமாவாசை நாளில் அதிகளவு பக்தர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதற்காக வருவது வழக்கம். இந்நிலையில், நாளை (ஆக.4) ஆடி அமாவாசை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சுற்றியுள்ள நுாறுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆண்டுதோறும் அதிகளவில் தேவிபட்டினம் நவபாஷாணம் சென்று வருகின்றனர். ஆனால் காலை நேரங்களில் ஆர்.எஸ்.மங்கலம் பஸஸ்டாண்டில் இருந்து தேவிபட்டினம் செல்வதற்கு குறைவான பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஆடி அமாவாசையில் தேவிபட்டினம் செல்லும் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்திப்பது தொடர் கதையாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து தேவிபட்டினத்திற்கு ஆடி அமாவாசையில் காலை நேரத்தில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை