உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எருது கட்டு வடமாடு, ஜல்லிக்கட்டு நலச்சங்க ஆலோசனைக் கூட்டம்

எருது கட்டு வடமாடு, ஜல்லிக்கட்டு நலச்சங்க ஆலோசனைக் கூட்டம்

உத்தரகோசமங்கை : ராமநாதபுரம் மாவட்ட எருதுகட்டு, வடமாடு, ஜல்லிக்கட்டு நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் உத்தரகோசமங்கையில் நடந்தது. சங்க தலைவர் பால்கரை சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ஹாலிக் முன்னிலை வகித்தார்.ராமநாதபுரம் கிருஷ்ணன் பங்கேற்று மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வடமாடு, எருதுகட்டு, ஜல்லிக்கட்டு திருவிழாவை பாதுகாப்பாகவும், சட்ட முறைப்படியும் நடத்துவது பற்றி ஆலோசனை வழங்கினார். வீர விளையாட்டுகளை பொறுப்புடன் காப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.மாடு மற்றும் மாட்டின் உரிமையாளருக்கு காப்பீடு பெறுவது, விழாக்களில் பங்குபெறும் காளைகள் சரியான உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். கால்நடை டாக்டரின் ஆலோசனை கடிதம் பெற்றிருக்க வேண்டும். ஊக்க மருந்து பயன்படுத்தக் கூடாது. மாட்டின் உரிமையாளர், மாடுபிடி வீரர்களோ மது அருந்தக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாவட்டத் துணைத் தலைவர் காஞ்சிரங்குடி முனியசாமி, இணைச் செயலாளர் சிதம்பரம், வீரத்தமிழர் வடமாடு பேரவை மாவட்ட தலைவர் கோட்டை பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் பெருமாள் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்