உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூட்டுறவு பட்டயப்பயிற்சி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

கூட்டுறவு பட்டயப்பயிற்சி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் புதியமாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின்இணைப்பதிவாளர் ஜீனு கூறியிருப்பதாவது:ராமநாதபுரம்கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் கல்விஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. பத்தாம் வகுப்பு,பிளஸ் 2, பட்டயம், பட்டப்படிப்பு முடித்தவர்கள் சேரலாம்.விருப்பமுள்ளவர்கள் ஜூலை 31க்குள் www.tncuicm.comஎன்ற இணையதளத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு gmail.comஎன்ற இணையதளம் மற்றும் பட்டணம்காத்தான் ராமேஸ்வரம் ரோடு அமெரிக்கன்இன்டர்நேஷனல் ப்ளே ஸ்கூல் பின்பிறம் செயல்படும் கூட்டுறவுமேலாண்மை நிலையத்தை நேரில் அல்லது 88254 11649 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ