மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
5 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
5 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
5 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
5 hour(s) ago
பரமக்குடி : வேளாண்துறை சார்பில் விவசாயப்பணிகளுக்காக சீமை கருவேல மரங்களை அகற்ற ஏக்கருக்கு ரூ.9600 வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது.பரமக்குடி அருகே நயினார்கோவிலில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கிராம வேளாண் முன்னேற்ற குழுவில் உள்ள விவசாயிகளுக்கு காரடர்ந்தகுடியில் பயிற்சி முகாம் நடந்தது.வேளாண் இணை இயக்குனர் கண்ணையா தலைமை விகித்தார். துணை இயக்குனர் மத்திய திட்டம் பாஸ்கர மணியன், மாநிலத் திட்டம் அமர்லால் முன்னிலை வகித்தனர். அப்போது சீமை கருவேல மரங்களை அகற்ற ஏக்கர் ஒன்றுக்கு ரூ.9600 மானியம் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு இயக்க திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் என்றனர்.நயினார்கோவில் உதவி இயக்குனர் பானுபிரகாஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி அலுவலர்கள் இளையராஜா, ஜெயப் பிரியா செய்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago