உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் மிளகாய் மண்டலம் நான்கு மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவர்

ராமநாதபுரத்தில் மிளகாய் மண்டலம் நான்கு மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவர்

ராமநாதபுரம்:ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி விவசாயிகள், வியாபாரிகள் பயன் பெறும் வகையில், 4.38 கோடி ரூபாயில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மிளகாய் மண்டலம் அமைக்கப்பட உள்ளது.குண்டு மிளகாய் சாகுபடியில் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கமுதி, முதுகுளத்துார், கடலாடி, பரமக்குடி திருப்புல்லாணி, திருவாடானை, கீழக்கரை, தொண்டி, ஆர்.எஸ். மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரியாகவும், கண்மாய் பாசனத்திலும் மிளகாய் சாகுபடி செய்கின்றனர்.இங்கிருந்து, ஆண்டுக்கு 50,000 டன் குண்டு மிளகாய், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களுக்கு செல்கிறது. ராமநாதபுரம் குண்டு மிளகாய் அதிக காரம், சத்து மிகுந்துள்ளதால் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தை மையமாக கொண்டு சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்களை மிளகாய் மண்டலமாக 2023-2024 தமிழக பட்ஜெட்டில் அரசு அறிவித்தது. இந்த நான்கு மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் பயன்பெறும் வகையில், 4.38 கோடி ரூபாயில் கமுதியில் மிளகாய் மண்டலம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஆறுமுகம் கூறியதாவது:ராமநாதபுரத்தில் 41 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் சாகுபடி நடக்கிறது. இதற்காக விவசாய குழுக்களை ஒன்றிணைத்து 5,294 பேர் உள்ளனர். முதற்கட்டமாக அரசு மானியத்துடன் 2,446 பேர் சீமைக்கருவேல மரங்களை அகற்றி, கூடுதலாக 700 ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்கின்றனர். 646 பேர், 45 லட்சம் ரூபாயில் சொட்டுநீர் பாசனம் பெற்றுள்ளனர்.புதிய மிளகாய் மண்டலம், 5,000 டன் குளிர்சாதன கிடங்கு, மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்தல் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பான திட்ட அறிக்கை தயார் செய்து நடப்பாண்டில் செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ