உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானையில் துணை மின்நிலையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல் 

திருவாடானையில் துணை மின்நிலையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல் 

திருவாடானை : திருவாடானையில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள், மக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவாடானைக்கு சின்னக்கீரமங்கலம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படுகிறது. திருவாடானையில் தாலுகா அலுவலகம், ஊராட்சிஒன்றிய அலுவலகம், தேசிய மயமாக்கபட்ட வங்கிகள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. மேலும் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யபடுகிறது. நாளுக்கு நாள் மின்இணைப்புகள் அதிகரித்து வருகிறது. காற்று, மழை காலங்களில் மின்தடை ஏற்படும் போது அவற்றை சரி செய்ய மணிக்கணக்கில் செலவிடும் நிலை ஏற்படுகிறது.இது குறித்து மக்கள் கூறியதாவது- திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஏக்கரில் துணைமின்நிலையம் அமைக்கபட்டது. சின்னக்கீரமங்கலத்தில் 110 கிலோ வாட் வினியோகம் உள்ள துணை மின்நிலையம் அமைக்கபட்டதால், இந்த துணை மின்நிலையம் மூடபட்டு, அங்கிருந்து மின்வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது திருவாடானை தாலுகா தலைமையிடமாக இருப்பதால் அரசு மருத்துவமனை உட்பட அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. இது தவிர கோழிபண்ணைகள், சிறு தொழில்களும் பெருகியுள்ளது. ஆகவே ஏற்கனவே அமைக்கபட்டிருந்து அந்த இடத்தில் மீண்டும் துணைமின்நிலையம் அமையும் பட்சத்தில் மின்தடை ஏற்படும் போது பழுதை விரைந்து சரி செய்வதுடன், மக்களுக்கும் விவசாயத்திற்கும் தடையின்றி மின்விநியோகம் செய்வதற்கு வாய்ப்பாக அமையும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை