மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
24 minutes ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
24 minutes ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
25 minutes ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
26 minutes ago
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா கீழக்குளம், ஆனைசேரி, மணலுார், நல்லாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் 1000 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கிராமங்களில் மானாவரியாக நெல் விவசாயம் செய்தனர்.அதற்கு பின் நிலத்தை உழவு செய்து விவசாயிகள் மிளகாய், பருத்தி, சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்து வந்தனர். போதுமான தண்ணீர் இல்லாததால் பல இடங்களில் பருத்திச் செடிகள் வீணாகியது. கீழக்குளம், மணலுார் உட்பட சுற்றியுள்ள கிராமங்களில் மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சினர். தற்போது பருத்தி செடிகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துகின்றன. அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:மணலூர், கீழக்குளம், ஆனைசேரி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயத்தை நம்பி வாழ்கிறோம். கடந்தாண்டு பருவ மழையால் நெல் வீணாகியது. தற்போது பருத்தி சாகுபடியிலும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயம் முழுவதும் அழிந்து வருகிறது.எனவே வரும் காலத்தில் நெல் பயிரிட்டால் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் நிலத்திற்கு வருவதற்கு விவசாயிகள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் கிராமங்களில் ஆய்வு செய்து காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
24 minutes ago
24 minutes ago
25 minutes ago
26 minutes ago