மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
28 minutes ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
28 minutes ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
29 minutes ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
30 minutes ago
சாயல்குடி : பொதுவாக திருமணம், காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, கோயில் கும்பாபிஷேகம், கொடை விழா உள்ளிட்டவைகளில் பெரும்பாலும் சமையல் விஷயங்களில் ஆண் சமையல் கலைஞர்கள் தங்களுடைய பங்களிப்பை ஆற்றுவார்கள்.தலைமை ஆண் சமையல் கலைஞருக்கு உதவியாக ஐந்து முதல் பத்து பேர் கொண்ட குழுவாக சமையல் கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களில் காய்கறி வெட்டுவது உள்ளிட்ட குறிப்பிட்ட பணிகளுக்கு பெண்கள் குறைவான அளவில் பணியாற்றுவார்கள்.ஆண்களுக்கு நிகராக பெண்களும் தலைமை வகித்து குழுவாக சென்று பல்வேறு விழாக்களில் பங்கேற்று சமையல் செய்து வரும் நிகழ்வு பல்வேறு கிராமங்களில் சத்தமில்லாமல் நிகழ்ந்து வருகிறது.சாயல்குடி அருகே பூப்பாண்டியபுரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் தலைமை வகித்து நிர்வகிக்கும் சமையல் கலைஞர்கள் குழு உள்ளது. பூப்பாண்டியபுரத்தை சேர்ந்த சமையல் கலைஞர் சுயம்பு கனி 52, கூறியதாவது:ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு விழாக்களில் சமையல் செய்வதற்கு தயாராகி செல்கின்றனர். பெண்கள் தலைமை வகித்துச் செல்லக்கூடிய சமையலுக்கு ஆண்களைப் போலவே அவர்களுக்கும் சம அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது.நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் குழுவினருடன் சென்று சமையல் பணி செய்து வருகிறேன். தரமான, சுவையான, சுகாதாரமான உணவு வகைகளை சமையல் செய்து தருவது மனதிற்கு திருப்தி அளிக்கிறது. இதன் மூலம் ஏராளமான ஆர்டர்கள் எங்களைத் தேடி வருகின்றன.முழு அர்ப்பணிப்பு உணர்வோடு கடினமான வேலையை கூட இலகுவாக பெண்கள் குழுவினருடன் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.ஆண்களுக்கு நிகராக பெண்களும் முன்னின்று சாயல்குடி, கமுதி, கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சமையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
28 minutes ago
28 minutes ago
29 minutes ago
30 minutes ago