உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காரங்காட்டில் படகு போக்குவரத்து நிறுத்தம்

காரங்காட்டில் படகு போக்குவரத்து நிறுத்தம்

தொண்டி : கடலில் பேரலைகள் ஏழும்பக்கூடும் என்பதால் காரங்காட்டில் படகு போக்குவரத்து நிறுத்தபட்டது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தொண்டி மரைன் போலீசார் கூறுகையில், ஜூன் 10 முதல் 14 இரவு 11:30 மணி வரை கடலில் பேரலைகள் எழும்பக்கூடும், மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கடற்கரையை சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் கடல் அருகில் செல்லவோ, கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளவோ, கடலில் இறங்கி குளிக்கவோ கூடாது.மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். மீனவர்கள் தங்களது படகுகளை சேதம் அடையாத வகையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து கொள்ளலாம். காரங்காட்டில் படகு போக்குவரத்து நிறுத்தபட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை