மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
14 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
14 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
14 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
14 hour(s) ago
கீழக்கரை: கீழக்கரை, ஏர்வாடியில் உள்ள சில ஓட்டல்களில் கெட்டுப்போன மீன் உணவு விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இந்நிலையில் சில ஓட்டல்களில் லாப நோக்கத்தில் நாள்பட்ட மீன்களை பிரிட்ஜில் வைத்து அவற்றை குழம்பிலும், பொரித்தும் வைத்து விற்பனை செய்வது அதிகரித்து வந்தது. இதுகுறித்து பொதுமக்களின் புகாரின் பேரில் தினமலர் நாளிதழில் கடந்த ஜூன் 4ல் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக கீழக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட ஓட்டல்களில் உணவு கலப்பட தடுப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயகுமார் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை பகுப்பாய்வு வாகனத்தில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், ராமநாதபுரம் அலுவலர் தர்மர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது கலர் அதிகமாக பயன்படுத்தியகோழி இறைச்சியை கொட்டி அழிக்கப்பட்டது. உரிமையாளர்களுக்கும் உணவுப் பொருட்களை கையாள்வோருக்கும் உணவு பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் உணவுப் பொருட்களை உணவு மாதிரி எடுத்து ஆய்வு செய்யப்பட்டதில் சுத்தம் மற்றும் சுகாதாரம் இல்லாத கடைகளுக்கு அபராதம், நோட்டீஸ் வழங்கப்பட்டது.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago