உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நகைகளை மறு அடகு வைக்க உதவிய மேலாளரிடம் ரூ.3.75 லட்சம் மோசடி

நகைகளை மறு அடகு வைக்க உதவிய மேலாளரிடம் ரூ.3.75 லட்சம் மோசடி

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே வட்டான்வலசையைச் சேர்ந்தவர் இளங்கோவன், 47. இவர் மனைவி கவுதமியுடன் சேர்ந்து ராமநாதபுரம் வங்கியில் 12 சவரன் நகைகளை அடகு வைத்து, 3.56 லட்சம் ரூபாய் பெற்றார். நகைகளை திருப்பாத நிலையில் வங்கி நிர்வாகம் அவற்றை திருப்பும்படி எச்சரிக்கை விடுத்தது. இதனால் கணவனும், மனைவியும் ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தங்களின் நகைகளை திருப்பி மறு அடகு வைக்க உதவி கேட்டனர். அந்த நிதி நிறுவன துணை மேலாளர் சரவணன், 34, வங்கியில் அடகு வைத்த நகைகளை வட்டியுடன் திருப்ப, 3.75 லட்சம் ரூபாயை இளங்கோவனிடம் கொடுத்தார். நகைகளை வங்கியில் திருப்பிய பின், வாங்கிய பணத்தை கொடுக்காமல், சுயமாக சம்பாதித்த பணத்தில் நகைகளை திருப்பியதாக சரவணனிடம் கூறி விட்டு, மனைவியுடன் இளங்கோவன் வங்கியிலிருந்து சென்று விட்டார்.இதுதொடர்பாக, நிதி நிறுவன மேலாளர் சரவணன் புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார,் கணவன், மனைவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்