உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆன்லைன் வர்த்தகம் எனக்கூறி வியாபாரியிடம் ரூ.45 லட்சம் மோசடி

ஆன்லைன் வர்த்தகம் எனக்கூறி வியாபாரியிடம் ரூ.45 லட்சம் மோசடி

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தை சேர்ந்த வியாபாரி ஜெயபால் 50, என்பவரிடம் ஆன்-லைன் வர்த்தகம் என்ற பெயரில் ரூ.45 லட்சம் மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக பைசர்கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவர் பஜாரில் கடை வைத்துள்ளார். இவரது அலைபேசி எண்ணிற்கு சமீபத்தில் 'வாட்ஸ்-ஆப்'பில் வந்த தகவலில் ஆன்-லைன் வர்த்தகம் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என தெரிவித்திருந்தனர்.ஜெயபால் இதுகுறித்து அந்த அலைபேசி எண்ணில் விசாரித்துள்ளார். ஒரு வர்த்தக நிறுவனத்தின் 'வாட்ஸ்-ஆப்' குழுவின் இணைப்பை மர்மநபர்கள் அனுப்பியுள்ளனர். அந்த இணைப்பில் ஜெயபால் தனது சுய விபரங்களை பதிந்து அவர்கள் கூறியதை எல்லாம் செய்துள்ளார்.முதற்கட்டமாக ரூ.20 ஆயிரம் அனுப்பியுள்ளார். இதனை நம்பி அவர்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தி ஆன்-லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். பணம் இரட்டிப்பாகி கொண்டே வந்தது.ஆசை அதிகரித்ததால் அதிகளவு பணம் முதலீடு செய்தார். மொத்தமாக ரூ.45 லட்சம் முதலீடு செய்த பின் அந்த நிறுவனத்தின் ஆன்-லைன் டிரேடிங் செயலி நிறுத்தப்பட்டது. அதிர்ச்சியடைந்த ஜெயபால் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்ட போது 'பொறுமையாக இருக்கவும்.செயலி விரைவில் செயல்படும். அப்போது உங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்' என்றனர். சில நாட்களில் ஜெயபால் தொடர்பு கொண்ட நபர்களின் அலைபேசிகள் அனைத்தும் 'சுவிட்ச் ஆப்' ஆனது. ஏமாற்றம் அடைந்த ஜெயபால் இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி.,சந்தீஷிடம் புகார் அளித்தார்.அவரது உத்தரவில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்தனர். ஜெயபால் பணம் செலுத்திய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. இதுபோல அக்கும்பல் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை