உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிக்னல் லைட் இன்றி ராமேஸ்வரம் அருகே அடிக்கடி விபத்து: மக்கள் பீதி

சிக்னல் லைட் இன்றி ராமேஸ்வரம் அருகே அடிக்கடி விபத்து: மக்கள் பீதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் லைட் இன்றி அடிக்கடி விபத்து நடப்பதால் மக்கள் பீதி அடைகின்றனர்.மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மண்டபத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதனை தவிர்க்க ரோட்டின் நடுவில் சென்டர் மீடியன் அமைத்தனர்.ஆனால் இரவில் சென்டர் மீடியன் உள்ள பகுதி இருள் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் சென்டர் மீடியன் மீது வாகனங்கள் அடிக்கடி மோதி சேதமடைவதுடன் பயணிகள் பலர் காயமடைகின்றனர்.இதனால் இப்பகுதியில் மக்கள் பீதியுடன் பயணிக்கின்றனர். எனவே சென்டர் மீடியன் இருபுறம் நுழைவில் இருளில் ஒளிரும் சிக்னல் லைட் மற்றும் சோலார் லைட் பொருத்தி எதிர்காலத்தில் விபரீதம் ஏற்படுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ