உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஏர்வாடி ஊராட்சி பகுதியில் அகற்றப்படாத குப்பை

ஏர்வாடி ஊராட்சி பகுதியில் அகற்றப்படாத குப்பை

கீழக்கரை : ஏர்வாடி ஊராட்சி காட்டுப்பள்ளி தர்கா, தீன்நகர் அரசு மனநல காப்பக பகுதிகளிலும் ரோட்டோரம் குப்பை குவிந்துள்ளதால் யாத்ரீகர்கள் முகம் சுளிக்கின்றனர்.கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த யாத்திரிகர் சம்சுதீன் கூறியதாவது:ஏர்வாடி ஊராட்சி தர்கா செல்லும் பிரதான சாலையில் நாள்தோறும் குப்பை அகற்றப்படுகிறது. ஆனால் தெருக்களில் முறையாக அள்ளுவதில்லை. இதம்பாடல் அருகே மின்வாரியம் செல்லும் வழியில் தினமும் குப்பை எரிக்கப்படுகிறது.இதனால் புகை மண்டலம் உருவாகி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து ஊராட்சி பயன்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ