உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு போக்குவரத்து ஊழியர்கள் 24 மணி நேரம் உண்ணாவிரதம்

அரசு போக்குவரத்து ஊழியர்கள் 24 மணி நேரம் உண்ணாவிரதம்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்துக்கழக புறநகர் பணிமனை முன்பு சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு இணைந்து 24 மணி நேர உண்ணா விரதப் போராட்டத்தை துவக்கினர்.மத்திய சங்கத்தலைவர் ராஜன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி துவக்கி வைத்தார். மண்டல பொதுச்செயலாளர் தெய்வீரபாண்டியன், ஓய்வு பெற்றோர் அமைப்பின் மண்டல நிர்வாகிகள் பவுல்ராஜ், வெங்கடேசன், துணை பொது செயலாளர் சமயதுரை, லோகநாதன், பொருளாளர் தியாகராஜன், துணைத்தலைவர் டி.பாஸ்கரன், கிளை செயலாளர் எம்.பாஸ்கரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.போராட்டத்தில் 15 வது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடவும், ஓய்வு பெற்றவுடன் பணப்பலன், ஒப்பந்த பலன்களை வழங்க வேண்டும். பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்குவது போல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். தனியார் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். வாரிசு வேலையை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்