உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு போக்குவரத்து தொழிலாளர்கள்  பணிமனை முன் வாயில் கூட்டம் 

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள்  பணிமனை முன் வாயில் கூட்டம் 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்தும் நகர் கிளை பணிமனை முன்பு வாயில் கூட்டம் நடந்தது. நகர் கிளைத்தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். கிளை செயலாளர் துரைப்பாண்டி, பொருளாளர் பழனிசாமி, மாவட்ட துணைச்செயலாளர் பாஸ்கரன், மத்திய சங்கத்தலைவர் எஸ்.ஆர்.ராஜன், பொதுச்செயலாளர்தெய்வீரபாண்டியன் ஆகியோர் பேசினர்.சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி நிறைவுறையாற்றினார். கிளை துணை செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார். கூட்டத்தில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களை வெறும் கையுடன் வீட்டுற்கு அனுப்பக் கூடாது.ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உதிரி பாகங்களை முறையாக சப்ளை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ