உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விளையாட்டு விடுதிக்கு அரசு பள்ளி மாணவி தேர்வு

விளையாட்டு விடுதிக்கு அரசு பள்ளி மாணவி தேர்வு

உத்தரகோசமங்கை : -உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி குண பாரதி தமிழக அரசால் நடத்தப்படும் விளையாட்டு விடுதி தேர்வில் சமீபத்தில் கலந்து கொண்டார்.சென்னையில் நடந்த ஹாக்கி விளையாட்டு தேர்வில் பங்கேற்று தேர்வு செய்யப்பட்டார். ஜூன் 9ல் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு விடுதியில் சேர்வதற்காக செல்கிறார்.விளையாட்டு விடுதியில் சேர உள்ள மாணவி குண பாரதியை தலைமையாசிரியை ராணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, மாவட்ட ஹாக்கி விளையாட்டு பயிற்றுநர் மணி, மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் கிழவன் சேதுபதி, தாமரைக்கண்ணன், ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் மதியழகன், முத்தரசு, உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ், மகாலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை