| ADDED : ஆக 23, 2024 04:05 AM
பரமக்குடி: கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என கைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.- பரமக்குடி, எமனேஸ்வரம் அனைத்து கைத்தறி நெசவாளர் சொசைட்டிகளின் உறுப்பினர்களின் பெடரேசன் நிர்வாக குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. பெடரேசன் தலைவர் சேசைய்யன் தலைமை வகித்தார். செயலாளர்கள் கோதண்டராமன், ருக்மாங்கதன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கணேஷ் பாபு வரவேற்றார்.கூட்டத்தில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஜவுளி விற்பனையில், ரிபேட் உச்சவரம்பு தொகையை உயர்த்தி முழு விற்பனை விலைக்கு ரிபேட் வழங்க வேண்டும். பரமக்குடி சரக்கத்தில் நுால் குடவுன் வேண்டும்.தமிழக அரசின் கொள்கை முடிவான நெசவாளர்களுக்கு தனியாக வங்கி அமைக்கும் திட்டம் நிறைவேற்ற வேண்டும். கைத்தறி மீதான ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். முதியோர் மாத ஓய்வூதிய ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். துணைச் செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.