உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

பரமக்குடியில் உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

பரமக்குடி: பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 'என் கல்லுாரி கனவு' என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் பழனிகுமார் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சுதாகர், தாட்கோ மேலாளர் தியாகராஜன், பரமக்குடி தாசில்தார் சாந்தி கலந்து கொண்டனர்.இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டல் கையேடுகள் வழங்கப்பட்டன. அமலோற்பவ ஏனோக்ராஜ், சுனில் குமார் பேசினர். பரமக்குடி தாசில்தார் (தனி) காதர் முகைதீன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை