உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே மேலவயல் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் 40. இவருக்கு மூன்று ஆண்டுகள் முன்பு கார்த்திகா என்பவருடன் திருமணம் நடந்தது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் திருமணத்திற்கு பின் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் பிரச்னையில் ஈடுபட்டதால் மனைவி சில மாதங்களுக்கு முன்பு கணவனை பிரிந்து அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த சரவணன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இது குறித்த புகார் அடிப்படையில், ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசு வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி